search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு வியாபாரி கொலை"

    • கொலை வழக்கில் கைதான 5 பேரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
    • மேலும் பழிக்கு பழியாக வேறு யாரையாவது இந்த கும்பல் கொலை செய்ய திட்டம் வைத்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் பாரதி புரத்தை சேர்ந்தவர் அழகர்(45). இவர் நிலக்கோட்டையில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 10-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் இவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக நிலக்கோட்டை போலீசில் அழகரின் மனைவி மேரி புகார் அளித்தார்.

    அந்த புகாரில் திண்டுக்கல் லை சேர்ந்த பிரபல ரவுடி சுள்ளான் ரமேஷ் கொலை வழக்கில் எனது கணவர் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்தவழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் அவரது நண்பர்கள் கடந்த சில நாட்களாகவே எனது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.

    எனவே அவர்கள்தான் கொலை செய்திருக்ககூடும் என தெரிவித்திருந்தார். இதனிடையே கொலை வழக்கு தொடர்புடைய சுள்ளான்ரமேசின் தம்பி சதீஸ், திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்தி, கோவிந்தா புரத்தை சேர்ந்த சிவகணே சசபரி, பிள்ளையார்பாளை யத்தை சேர்ந்த மாணிக்கம், சர்புதீன் ஆகியோர் திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    இதனையடுத்து சரணடைந்த 5 பேர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவேண்டும் என நிலக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் நிலக்கோட்டை போலீசார் அனுமதிகோரினர். மாஜி ஸ்திரேட் நல்லகண்ணன் அவர்கள் 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் குருவெங்க ட்ராஜ் தலைமையிலான போலீசார் அவர்களிடம் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றார். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் பழிக்கு பழியாக வேறு யாரையாவது இந்த கும்பல் கொலை செய்ய திட்டம் வைத்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×